சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதலாவது இந்தியர் என்கின்ற புகழை பெற்றார் ரோஹித் சர்மா..!
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை படைப்பது என்பது ரோஹித் சர்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனையை ரோஹித் படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-து டி20 போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்த்துள்ளார். இப்போட்டியில் மூன்றாவது ஓவரில்,ரோஹித் அடித்த சிக்ஸரின் மூலம் இந்த சாதனையை படைத்தார்.
32 வயதாகும் இந்திய நட்சத்திர வீரர் ரோஹித், சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு முன் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி (476 சிக்ஸர்), மேற்கிந்திய தீவுகள் சர்வதேச நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் (534 சிக்ஸர்) ஆகிய இருவர் மட்டுமே இந்த மைல்கல்லைகடக்க முடிந்தது. இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ரோஹித் இப்பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார். டி20 போட்டிகளை பெருத்தவரையில் ரோஹித் சர்மா அதிக சிக்ஸ்ர் அடித்தவர்கள் பட்டியலில் 1- இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.