தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.