Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இவுங்க தான் அடுத்த கேப்டன்” அடித்துச் சொல்லும் கில்லி ….!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் அல்லது பாட் கம்மின்ஸ் தான் வரவேண்டும் என முன்னாள் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக வலம் வருபவர் டிம் பெய்ன். இவர் சில தினங்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு கோடை காலத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்று விடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் விக்கெட் கீப்பிங் ஜாம்பவானுமான ஆடம் கில்கிறிஸ்ட், ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் பற்றி மனம் திறந்துள்ளார்.

அவர் இதனைப் பற்றி கூறியதாவது, ‘ ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டனான டிம் பெய்ன் ஓய்வு பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் அல்லது பேட் கம்மிங்ஸ் தான் கேப்டனாக நியமிக்கப்படவேண்டும். ஏனெனில், இந்த இரு வீரர்களுக்கும் இந்த போட்டியைப் பற்றிய அனைத்து விதமான நுணுக்கங்களும் தெரியும். அதனால், இவர்களில் யாரேனும் ஒருவர் இந்தப் பொறுப்பை ஏற்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு பெறும் பலத்தைச் சேர்க்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் நாளை தொடங்கவுள்ள நிலையில் கில்கிறிஸ்ட் கூறிய கருத்து, கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |