‘பிக்பாஸ் ‘5 பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
”பிக்பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருபவர் சிபி. இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனிருத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.