இங்கிலாந்தில் தடுப்பூசி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலை கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு 3 மாதங்களில் தடுப்பூசி பாதுகாப்பு மங்க தொடங்குவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியை தான் “கோவிஷீல்டு” என்ற பெயரில் இந்தியாவின் சீரம் நிறுவனமும் தயாரித்து வருகிறது.
மேலும் அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை போட்டு கொண்ட பிரேசிலை சேர்ந்த 4 கோடியே 20 லட்சம் பேர், ஸ்காட்லாந்தை சேர்ந்த 20 லட்சம் பேர் தரவுகளை ஆராய்ந்த பிறகே ஆய்வின் முடிவுகள் லேன்செட் பத்திரிகையில் வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. அதாவது ஆய்வில், ஸ்காட்லாந்தில் இந்த தடுப்பூசியை 2 டோஸ் போட்டு கொண்ட பிறகு 5 மாதங்களான நிலையில் இறப்பு மற்றும் மருத்துவமனை சேர்க்கை 5 மடங்கு அதிகரித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.