பாகிஸ்தானில் விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று தனது கூண்டை சுத்தம் செய்ய வந்தவரை கடித்து குதறியவீடியோ வெளியாகி உள்ளது .
கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னுதிரட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டு இருந்தார் .இந்நிலையில் சிங்கத்தின் கூன்டிற்கருகில் சுத்தம் செய்து கொண்டிருந்தார் .அப்போது கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திரட்டாவின்இடது கையை கடித்து குதறியது
.இதில் வலிதாங்கமுடியாமல் அவர் சுதாரித்துக்கொண்டு சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தார் .சிங்கம் கடித்ததில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது .இதனால் அவர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .