தெற்கு அலாஸ்கா பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகி ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடபகுதியில் இருக்கும் அலாஸ்கா என்னும் மாகாணத்தில் இன்று காலை நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையமானது இந்த நிலநடுக்கம் 6.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக கூறியிருக்கிறது.
சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு கூறியிருக்கிறது.