Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்?…. ஆய்வில் வெளியான அதிரடி முடிவுகள்….!!!!

கொரோனா தொற்று காரணமாக கடும் ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வந்ததையடுத்து ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடத்துக்கான சம்பள உயர்வு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அப்போது முடிவில் இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்கு ஆண்டு வருவாய் 52.2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 37 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் 30 சதவீத நிறுவனங்கள் அதிக நபர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனை ஒவ்வொரு துறைவாரியாக தெரிவித்து உள்ளது. அதன்படி பொறியியல் துறையில் 57.5 சதவீதம், தகவல் தொழில்நுட்பத் துறையில் 53.4 சதவீதம், தொழில் திறன் வர்த்தகத் துறையில் 34.2 சதவீதம், விற்பனைத் துறையில் 37 சதவீதம், நிதித் துறையில் 11.6 சதவீதம் போன்ற துறைகளில் சம்பளம் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் இந்தியாவில் இருந்து 435 நிறுவனங்கள் பங்கு பெற்றது. அத்துடன் இந்தியாவில் 9.3 சதவீத சம்பள உயர்வு இருக்கும் என்று கணிக்கிடப்பட்டுள்ளது. இதனால் 2022-ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி மற்றும் சம்பளம் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு முடிவுகள் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த ஆய்வானது நடப்பாண்டில் மே-ஜூன் மாதங்களில் சுமார் 1405 நிறுவனங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு 8 சதவீத சம்பள உயர்வு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |