உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 2 டோஸ் செலுத்தி முடித்த 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து விடுவது தெரியவந்து உள்ளது. இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்கிற பெயரில் தயாரித்து வழங்குகிறது. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேரிடமும், பிரேசிலில் 4 கோடியே 20 லட்சம் நபர்களிடமும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தடுப்பூசி 2-வது தவணை போட்டுக்கொண்ட பின் 2 வாரங்களில் ஒப்பிடும்போது 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது, இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி செயல்திறனில் சரிவு முதலில் 3 மாதங்களில் தோன்றத் தொடங்குகிறது, மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் இறப்பு ஆபத்து 2-வது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 வாரங்களுக்குப் பிறகு இரட்டிப்பாகும்.
2-வது தடுப்பூசிக்குப் பிறகு 4 மாதங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து மற்றும் இறப்பு 3 மடங்கு அதிகரிக்கிறது.
கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் ஒரு முக்கிய ஆயுதமாக இருக்கிறது. ஆனால் அத்துனுடைய செயல்திறன் குறைவது சிறிது காலமாக கவலையாக அளிக்கிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு எப்போது குறைவது தொடங்குகிறது என்பதைக் கண்டறிவதன் மூலமாக அதிகபட்ச பாதுகாப்பு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யக்கூடிய பூஸ்டர் திட்டங்களை அரசாங்கங்களால் வடிவமைக்க முடியும்” என்று இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆஷிஸ் ஷேக் தெரிவித்தார். சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி கூறியிருப்பதாவது “நீங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை 2 டோஸ் எடுத்திருந்தாலும் எங்கள் பணியானது பூஸ்டர்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என கூறினார்.