Categories
மாநில செய்திகள்

மீண்டும் மஞ்சப்பை…. நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை காண நிகழ்ச்சியை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரை நிகழ்ச்சி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை முதல் செயல்பாட்டுக்கு முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்க கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும். அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |