இஸ்ரேல் அரசு முதல் முறையாக 4-ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் நான்காவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் சுகாதார நிபுணர் குழு பரிந்துரை செய்த இந்த முடிவிற்கு சிறந்த வரவேற்பினை அளித்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் இஸ்ரேல் நாட்டில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஒமிக்ரானால் உயிரிழந்ததையடுத்து இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் சுகாதாரத்துறையினர் நாட்டில் 340 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் அரசு தங்கள் நாட்டு மக்கள் ஜெர்மனி, அமெரிக்கா, துருக்கி, கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.