பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது .
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2002 ஜனவரி 12-ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி நெல்லையில் இருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜனவரி 13 சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஜனவரி 14ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 3. 10 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.