சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியும், உசிலம்பட்டியில் வசிக்கும் சூர்யா என்பவரும் காதலித்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சூர்யா மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.