பாகிஸ்தானில் 30 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெச் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பலூசிஸ்தான் என்னும் மாகாணத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட 30 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மாதிரிகளைப் பெற்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுயிருக்கிறார்கள்.
அதனைத்தொடர்ந்து, அந்நாட்டின் கெச் மாவட்டத்தில் சுமார் 15 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமான வேலைகளை தவிர்த்து பிற பணிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.