சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக கோகுல் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம், கோகுல் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் உறவுக் கொண்டதாக தெரிகிறது இதனால் சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட கோகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட கோகுல் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
Categories