Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவில் கட்டிடத்தின் மேல் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி …!!

கள்ளக்குறிச்சில் கார்த்திகை தீப விளக்கை ஏற்ற கோவில் கட்டிடத்தின்  மேல் எறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார் .

 

சித்தேரி தெருவைச் சேர்ந்த 18 வயது குருமூர்த்தி என்ற இளைஞர் அங்குள்ள ராஜா ராஜேஸ்வரி கோவிலில் அர்ச்ஜகராகவும் ,போலீஸ் நண்பராகள் குழுவிலும் பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் புதன்கிழமை மாலை கோவில் கட்டடத்தின் மேலே ஏறி விளக்கேற்ற முயன்ற போது அவ்வழியாக சென்ற மின் கம்பி மீது கைப்பட்டு மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மயக்கமடைந்த குருமூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் .இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .

Categories

Tech |