ரயில் மோதியதால் நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடியில் ஒரு வாடகை வீடு எடுத்து தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இவருடன் 2 மனைவிகள் தங்கியிருந்தனர். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு சென்ற தனுசியாவை அவரது தந்தை கல்லக்குடிக்கு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தனுசியா அவர் இருக்கும் வாடகை வீட்டிற்கு தாமதமாக சென்றதால் ரவிச்சந்திரன் அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தனுசியா கல்லக்குடி முதுவத்தூர் சாலை அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ரயில் மோதியதால் தனுசியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனுசியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.