இத்தாலியில் காவல்துறையினர் உட்பட பல மக்களுக்கு தடுப்பூசியளிப்பது போல் பாசாங்கு செய்து, போலியாக சான்றிதழ் அளித்த செவிலியர் உட்பட 3 நபர்கள் கைதாகியுள்ளனர்.
இத்தாலியில் தடுப்பூசி முகாம் ஒன்றில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அதில் ஒரு செவிலியர், சிரஞ்சில் இருக்கும் மருந்தை, வெளியில் ஊற்றிவிட்டு, வெறும் ஊசியை செலுத்துகிறார்.
அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வைத்து உடனடியாக காவல்துறையினர் அந்த செவிலியர், தடுப்பூசி மையத்தின் தலைவர் உட்பட மூன்று நபர்களை கைது செய்திருக்கிறார்கள்.