நான்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினருக்கும் ஐ.ஜி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த 20- ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறையினர் மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நான்கு மண்டலங்களில் இருந்து ஆயுதப்படை போலீஸ்,அதிவிரைவு கமாண்டோ படையை சேர்ந்த 120 வீரர்கள் கலந்து கொண்டனர். இங்கு ஜீடோ, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே மற்றும் வால்சண்டை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று நிறைவு பெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு ஆயுதப்படை அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். மேலும் இரண்டாவது இடத்தை சென்னை பெருநகர காவலர்கள் வென்றனர். இதில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு தென் மண்டல ஐ.ஜி அன்பு பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன், துணை சூப்பிரண்டு விக்னேஷ்வரன், மாவட்ட விளையாட்டு அதிகாரி லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.