செம்மாண்டப்பட்டி ஏரியின் மதகுகளை மர்ம நபர்கள் திறந்து விட்டதால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் செம்மாண்டப்பட்டி பகுதியில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்மாண்டபட்டி ஏரி ஒன்று உள்ளது. இந்நிலையில் வெண்ணந்தூர் இருந்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் செம்மண்டாப்பட்டி ஏரி நிரம்பியுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை இரவொரு இரவாக திறந்து விட்டுள்ளனர். மேலும் ஏரியிலிருந்து சேமூருக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் அப்பகுதியிலுள்ள விளைநிலங்களில் புகுந்துள்ளது.
இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து போர்க்கால அடிப்படையில் கால்வாயை தூர்வாரி சேமூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து பயிர்கள் சேதமடைந்ததற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.