கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொள்ளாச்சி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் முக்கோணம் பகுதியில் வசிக்கும் கார்த்தீஸ்வரி என்பதும் அவர் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்தீஸ்வரியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.