இங்கிலாந்தில் அதிகரிக்கும் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு அந்நாட்டின் ராணியான 2 ஆம் எலிசபெத் தனது அரச குடும்பத்தினர்களுடன் பாரம்பரியமாக கொண்டாடி வரும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரானால் இங்கிலாந்தில் தற்போது வரை 40,000 த்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு இங்கிலாந்து நாட்டின் ராணியான 2 ஆம் எலிசபெத் தன்னுடைய அரச குடும்பத்தினர்களுடன் பாரம்பரியமாக சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் வைத்து கொண்டாடும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
இருப்பினும் இங்கிலாந்து நாட்டின் ராணியான 2 ஆம் எலிசபெத் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை வின்ட்சர் மாளிகையில் வைத்து கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.