Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய கரும்புகை…. தொழிலாளர்கள் அளித்த தகவல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

நூல் மில்லில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் நூல் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் ஒரு பெண் உள்பட 7 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் எந்திரத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சில நேரங்களில் எந்திரத்தில் தீ பிடித்து பஞ்சு பேல்களிலும் தீ பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு பேல்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |