வேலூர் பேரணாம்பட்டு பகுதியில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லேசான நில அதிர்வு என்பதால் பெரிய அளவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.