கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அப்போது ருசியான உணவுகளை சாப்பிட விரும்பும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத காரணத்தினால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். அந்த வகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான புள்ளி விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு இந்தியர்கள் பிரியாணியை தான் அதிக அளவில் அதாவது, மில்லியன் கணக்கில் ஆர்டர் செய்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் தொடர்ந்து 6வது ஆண்டாக உணவு பிரியர்களின் விருப்ப உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி 2021 ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 6,04,44,000 பேர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சமோசா ஒரு நிமிடத்திற்கு 50 லட்சம் ஆர்டர் செய்துள்ளனர்.