தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் கைது அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் வைத்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் ஏற்கனவே கைதான 55 மீனவர்களை விடுவிக்க மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடக்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகப் பகுதியில் படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.