சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் முதல் தர்பார் வரை சுமார் 179 படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் அவற்றில் என்றென்றும் பார்க்க பார்க்க சலிக்காத உணர்ச்சிகளை தூண்டி சிலிர்க்க வைக்கும் சிறந்த 10 படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
10வது இடம்:
இந்த வரிசையில் பத்தாவது இடத்தை பிடிப்பது முரட்டுக்காளை திரைப்படம். இந்தப் படம்தான் ரஜினியின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டது என்று கூறலாம். இதில் அவர் தனது நடை உடை பாவனைகள் அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியது. அவருக்கு ஒரு தனித்துவத்தையும் அதிக ரசிகர்களை பெற்றுத் தரவும் முக்கிய காரணமாக அமைந்தது.
9 வது இடம் :
அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் இருப்பது முத்து திரைப்படம். இந்தப் படம் ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்குமான வேறுபாட்டை உடைத்து தொழிலாளி என்பதைவிட முதலாளிக்கு ஒரு நல்ல நண்பன் சகோதரன் என்பதை உணர்த்தி வெளிவந்த ஒரு அற்புத திரைப்படம்.
8 வது இடம் :
எட்டாவது இடத்தை பிடிக்க இருக்கும் திரைப்படம் மன்னன். இந்தத் திரைப்படத்தில் அதிகார தோற்றத்துடன் இருக்கும் பெண்ணை நடிகர் ரஜினி தனது வசனங்கள் மூலம் திருத்துவது போன்ற காட்சிகள் அருமை என்றே சொல்லலாம். அப்படத்தில் அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பலரிடம் பேசப்படுகிறது. பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.
7 வது இடம் :
ஏழாவது இடத்தை பிடிக்கிறது படிக்காதவன். இந்த திரைப்படம் படிக்காத ரஜினி டெக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டு தனது தம்பிகளை நன்கு படிக்க வைத்து ஆளாக நினைக்கிறார். ஆனால் அவர்களாலேயே அவருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இதில் மனம் உடைந்த ரஜினி ஊரத் தெரிஞ்சுகிட்டன் உலகம் புரிஞ்சுகிட்டன் என்று பாடும் பாட்டு என்றும் மறக்க முடியாதவை. இன்றைக்கும் பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் இந்த பாடல்களை பார்க்கலாம்.
6 வது இடம் :
அடுத்ததாக ஆறாவது இடத்தைப் பிடிக்கிறது எந்திரன். இந்த திரைப்படம் முதன்முதலாக தொழில்நுட்பம் ரீதியாக ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படமாகும். இந்திய அளவில் பெரும் வெற்றி கண்ட இத்திரைப்படம் உலக அளவிலும் வெற்றிபெற்றது. ரோபோ தொழில்நுட்பத்தை கொண்டு ரஜினியின் ஸ்டைலில் இயக்குனர் ஷங்கர் இப்படத்தை இயக்கி இருப்பார். அதேபோல் ரஜினிகாந்தும் தனக்கான நடிப்பு தோற்றத்தை வில்லனாகவும் கதாநாயகனாகவும் படத்தில் அருமையாக நடித்திருப்பார்.
5 வது இடம் :
இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தைப் பிடிக்கிறது தளபதி. இப்படம் நட்புக்கான படம் என்றே கூறலாம். இந்த படத்தில் நட்புனா என்னனு தெரியுமா நண்பனா என்னன்னு தெரியுமா என்று ரஜினிகாந்த் கூறும் வசனங்கள் இன்றளவும் நண்பர்களிடையே கூறப்படுகிற வசனமாக இருக்கிறது. நட்புக்கான படம் என்றாலே அது தளபதி மட்டும்தான்.
4 வது இடம் :
அடுத்ததாக நான்காவது இடத்தை பிடிக்கிறது அண்ணாமலை திரைப்படம். இந்த திரைப்படத்தில் தனது நண்பனால் துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டு தனது வீட்டை இழந்து வருமானத்தை இழந்து தவிக்கும் ரஜினி. யார் தன்னை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தார்களோ அவர்கள் முன்னே நன்கு வாழ்ந்து காட்ட வேண்டும் பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்ற லட்சிய குறிக்கோளுடன் செயல்பட்டு அதில் வெற்றியும் காண்பார். இந்த படம் மிடில்கிளாஸ் மக்களுக்கு என்றைக்குமே பிடித்த படமாக இன்றளவும் இருக்கிறது.
3 வது இடம் :
அடுத்ததாக மூன்றாவது இடத்தை பிடிக்கிறது சந்திரமுகி. இன்றைக்கு 100 நாட்களை தாண்டினால் 100 கோடி வசூல் செய்தால் பிளாக்பஸ்டர் என்று கூறுகிறோம். ஆனால் சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக திரையரங்குகளில் முழுக்க முழுக்க ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடியுள்ளது என்பதே இதனுடைய சாதனை. இதுபோல் ஒரு பிளாக்பஸ்டர் படத்தை இதுவரை தமிழ் சினிமா கண்டதில்லை.
2 வது இடம் :
அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது படையப்பா. ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல்தான். படம் முழுக்க தனது ஸ்டைல் திறமையை காட்டியிருப்பார் ரஜினிகாந்த். சிறுகுழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியோர்களாக இருந்தாலும் சரி ரஜினிகாந்த் போல் ஸ்டைல் செய்யுங்கள் என்று கூறினால் அவர்களுக்கு படையப்பா படத்தில் வரும் காட்சிகள் தான் முதலில் நினைவுக்கு வரும். அதேபோல்தான் ஸ்டைலும் செய்வார்கள்.
1 வது இடம் :
இதை அனைத்தையும் தாண்டி முதலிடத்தை பிடிக்கிறது பாஷா. இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் திரைப்படம் வந்தாலும், இதற்கு ஈடு செய்ய முடியாது. கேங்ஸ்டர் என்றால் தமிழ் படத்தில் முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வருவது பாஷா தான். ரஜினி நடித்த திரைப்படத்திலேயே அவருக்கு மாசாக இருப்பதும் பாஷா திரைப்படம் தான். எத்தனை முறை பார்த்தாலும் படம் முடியும் வரை ஆரம்பத்தில் பார்த்த அதே உணர்ச்சியுடன் தான் இப்பொழுதும் மக்கள் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு ரஜினிகாந்தின் உடைய நடிப்பு திறமை பாஷா படத்தில் ரசிக்கும்படி காண்பிக்கப்பட்டிருக்கும்.