Categories
மாநில செய்திகள்

ரூ.1,500 கேட்ட மாணவிக்கு…. ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்…. மாணவி செய்த செயல்….!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தில் கூடுதலாக 7000 ரூபாய் வெளிவந்த காரணத்தினால் அதை மாணவி காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கீர்த்தி லட்சுமி என்பவர் அம்பத்தூரில் உள்ள கனரா ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1,500 ரூபாய் எடுப்பதற்கு உறுதி செய்திருந்த நிலையில், மொத்தம் 8500 ரூபாய் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமங்கலம் காவல் துணை ஆணையரிடம் ஏழாயிரம் ரூபாயை ஒப்படைத்தார். மற்றவரின் பணத்திற்கு ஆசைப்படாமல் திரும்ப ஒப்படைத்த மாணவியை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர்.

Categories

Tech |