Categories
பல்சுவை

பிறந்தநாள் கொண்டாடும் மற்றொரு #SUPERSTAR…….. கொண்டாடி மகிழும் ரசிகர்கள்…!!

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான யுவராஜ் சிங் பிறந்தநாளை  கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இன்று சினிமா துறையில் அசத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வர, கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் யுவராஜ்சிங் பிறந்த நாளும்  இன்று தான். இவரது பிறந்தநாளை கிரிக்கெட் ரசிகர்கள் தாறுமாறாக சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார் என்றால் யுவராஜ்சிங் கிரிக்கெட்டுக்கு சூப்பர் ஸ்டார். ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே சூப்பர் ஸ்டார்தான் என்பது உள்ளிட்ட புகழாரங்கள் சமூக வலைதளங்களில் யுவராஜ்சிங் அவர்களுக்கு குவிந்து வருகிறது.

Categories

Tech |