வானிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஓரியன் என்னும் ஆளில்லா விமானத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
ரஷ்யா ஓரியன் என்று பெயரிடப்பட்டுள்ள வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆளில்லா விமானம் சோதனையின்போது ஹெலிகாப்டர் ரகத்தை சார்ந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும் இந்த ஆளில்லா விமானத்தின் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நெடுந்தூரம் பல மணி நேரம் உளவு பார்க்க முடியும் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.