கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தில் உயர்நிலை பள்ளியில் மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட 9 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 88 மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று பள்ளியில் மதிய உணவுடன் முட்டை வழங்கியுள்ளனர். இந்த முட்டையை சாப்பிட்ட 8 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மயக்கம் அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒன்பது மாணவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மதிய உணவு சாப்பிட்ட 9 குழந்தைகள் மயக்கம் அடைந்த காரணத்தினால் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.