Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் பாசிப்பருப்பு நெய் உள்ளிட்ட 22 பொருள்கள் இடம்பெற்றுள்ளது.  மேலும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |