Categories
மாநில செய்திகள்

உடனே போங்க…! இன்று 3 மணி நேரம் செயல்படாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வாட் வரி செலுத்துவதற்கான இணையதள சேவை இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்புக்கூட்டு வரியை (வாட் வரி) இணைய வழியாக செலுத்துவதற்கு https://ctd.tn.gov.in என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வணிகவரி இணையதளத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணையதளத்தோடு ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த இணையதள சேவை இன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே மதிப்புக் கூட்டு வரியை செலுத்துபவர்கள் தங்களுடைய வரியை இன்று  மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |