மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா என்பது தெரியவந்துள்ளது. அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து ஜான் பாஷாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 20 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.