Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கோகுல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோகுலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |