Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாயாசம் குடித்த மூதாட்டி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் கனகவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 7-ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையையும் யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் அதே பகுதியில் வசிக்கும் பத்மாவதி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது கோவிலுக்கு சென்று வந்த போது பத்மாவதிக்கும், கனகவள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி பத்மாவதி கனகவள்ளியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனக்கு திருமண நாள் என்று கூறி மூதாட்டியின் காலில் விழுந்து பத்மாவதி ஆசிர்வாதம் வாங்கிய பிறகு மயக்க மருந்து கலந்த பாயாசத்தை அவருக்கு கொடுத்துள்ளார். அதனை குடித்தவுடன் மயங்கிய மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, வளையல் என 5 பவுன் தங்க நகையை திருடிவிட்டு பத்மாவதி அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது.

Categories

Tech |