Categories
உலக செய்திகள்

“அம்மாடியோ”…. 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது…. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு….!!!!

சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டையின் கரு, தற்போது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தெற்கு சீனாவில் உள்ள கான்சூவில் கண்டறியப்பட்டுள்ள அந்த டைனோசர் முட்டைக்கரு குறைந்தபட்சம் 66 மில்லியன் (6.6 கோடி) ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முட்டைக்கரு தொடர்பான தகவல் உலகிற்கு தெரிய வந்த சம்பவமும் சுவாரசியமானது. அதாவது இந்த முட்டை முதன் முதலில் 2,000 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. அடுத்த 10 வருடங்களுக்கு பத்திரமாக அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டது. அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது, பழைய புதைபடிமங்கள் பிரித்து வைக்கப்பட்டன.
இந்ந சமயத்தில் இந்த முட்டை குஞ்சு பொறிக்கும் நிலையில் கருவோடு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் இந்த டைனோசர் முட்டையின் மீது திருப்பியது. இதையடுத்து அதிநவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முட்டையை ஆய்வு மேற்கொண்டு பார்த்ததில், முட்டையில் உள்ள கருவானது, முறையாக வளர்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் இதுவரை டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் உள்ளே இருக்கக்கூடிய கரு முன்பே ஒன்று அழிந்து போய் இருக்கும் அல்லது மொத்தமாக உறைந்து இருக்கும்.
இந்த முட்டைகள் வரலாற்று அடையாளம் மற்றும் அறிவியல் ஆய்விற்காக பாதுகாக்கப்படும். அவ்வாறு பாதுக்காக்கப்பட்ட முட்டையில் கரு முழுமையாக வளர்ந்த நிலையில் இருந்தது தற்போது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு ‘பேபி யிங்லியாங்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேபி யிங்லியாங் தலை முதல் வால் வரை 10.6 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது. இதுதான் இதுவரையிலும் வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட அருமையான டைனோசர் முட்டைக்கரு என்று ஆராய்ச்சியாளர் டாக்டர் ஃபியான் வைசும் மா தெரிவித்துள்ளார். அந்த கருவின் அமைப்பு பறவைகளின் முட்டையில் குஞ்சு பொறிப்பதற்கு முன் இருப்பதைப் போல இருப்பதால் டைனோசர்களுக்கும், நவீன கால பறவைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு செய்ய இந்த கண்டுபிடிப்பு உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |