கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் அஸ்ட்ரா ஜெனேகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இறங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வருகிற தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரான் தப்பி விடும் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடிய தடுப்பூசியை உருவாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் பிரபல பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இறங்கியுள்ளன.
இதனை அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் உலகாளவிய மக்கள் தொடர்பு நிர்வாகி பிளேவியா கார்சியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இவ்விரு அமைப்புகளும் கூட்டாக சேர்த்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிதான் இந்தியாவில் புனே சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு என்கிற பெயரில் தயாரித்து வழங்கப்படுகிறது.