Categories
தேசிய செய்திகள்

தொடரும் கொடூரம்… பள்ளி மாணவியை சீரழித்த மூவர்… தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முஷாபர்நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிகார் மாநிலம் முஷாபர்நகர் பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், டிசம்பர் 9ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திருப்பினார். அப்போது, அந்த வழியாக டெம்போவில் வந்த மூவர், மாணவியை வீட்டில் சேர்ப்பதாகக் கூறினர். இதை நம்பிய மாணவி டெம்போவில் ஏறிச் சென்றார்.

இதையடுத்து, அந்த மூன்று பேரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவர்கள் மாணவியுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து, இதுகுறித்து யாரிடமாவது கூறினால் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

Image result for raped a schoolgirl.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பாக முஷாபர்நகர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவரை தேடி வருகின்றனர்.

முன்னதாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திஷா என்பவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முஷாபர்நகர் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |