தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் நுழைந்தது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமாக நுழைந்து வருகிறது. இதனால் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதியில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்க வேண்டும். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.