Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2-வதாக திருமணம் செய்த நபர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளை பரமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பரமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த பரமன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றவாளியான பரமனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பரமனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |