தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது 34 பேருக்கு உறுதியாகி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய அளவில் ஒமைக்ரான் பாதிப்பில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அச்சத்தில் உள்ளனர்.