Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டியூஷனுக்கு சென்ற சிறுமி…. டீச்சரின் அண்ணன் செய்த கொடூரம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் டீச்சரின் அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஒரு பெண்ணிடம் டியூசன் செல்கிறார். இந்நிலையில் டியூசன் சொல்லி கொடுத்த பெண்ணின் அண்ணனான அசோக் என்ற மணிவண்ணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மணிவண்ணன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வாறு 9 வயது சிறுமியை டியூசன் டீச்சரின் அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |