Categories
உலக செய்திகள்

OMICRON : “யாருமே தப்பிக்க முடியாது”…. உலக நாடுகளுக்கு WHO சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

உலக நாடுகள் புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரசிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதனை தொடர்ந்து நிபுணர்கள் பலரும் ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரித்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேபோல் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இஸ்ரேல் அரசு 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 4-ஆவது டோஸ் ( 2-வது பூஸ்டர் ) தடுப்பூசி செலுத்துமாறு சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஸ்டர் தடுப்பூசியை மட்டுமே நம்பி திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கிறது.

எனவே எந்த ஒரு நாடும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் 40 சதவீத இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |