Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பரோட்டா பிரியர்களுக்கு அடுத்த ஷாக்…. நெல்லையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள் , உணவு விடுதிகள் , சிற்றுண்டி போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்று பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சமூக வளைதளங்களில் பரோட்டா கடைகளில் விற்பனையாகாத பரோட்டாக்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் அதனை தண்ணீரில் நனைத்து சூடு செய்து விற்பனைக்கு வைக்கும் காட்சிகள் வைரலானது.

இதனையடுத்து நெல்லை மாநகர் பகுதி முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதாவது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் , மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் பரோட்டாக்கடைகளில்  சோதனை மேற்கொண்டனர். அப்போது பாளையங்கோட்டை கடை ஒன்றில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ பரோட்டாவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் மேலப்பாளையத்தில் ஒரு கடையில் 10 கிலோ பராட்டா  மற்றும் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுமார்  50 கிலோவுக்கும் மேற்பட்ட பரோட்டா, வேதிப் பொருட்கள் கலந்த அஜினோமோட்டா மற்றும் கலர் பொடிகள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இவ்வாறு மக்களுக்கு தீங்கு விளைக்கும் வகையில் பழைய உணவுப் பொருட்களை பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

Categories

Tech |