Categories
உலக செய்திகள்

“ஒருத்தருக்கு கொரோனா வந்ததுக்கு, இவ்ளோ அக்கப்போரா!”….. சீனாவில் நடப்பதை பாருங்கள்…!!

சீனாவின் டாங்ஜிங் நகரில் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், முழு நகருக்கும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

முதன்முதலில் சீன நாட்டில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா, கடும் விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது.

எனவே, உலகில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில், சீனா 113 வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் வியட்நாமிற்கு அருகில் இருக்கும் சீனாவின் டாங்ஜிங் நகரில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகரம் முழுக்க, பொது போக்குவரத்திற்கு தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் பூங்காக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இது மட்டுமன்றி, பள்ளிகளும் அடைக்கப்பட்டுவிட்டது. பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு, மாநகர முழுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |