Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விறகை திருடிய நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவிருக்கை கிராமத்தில் கூலி தொழிலாளி சுப்பையா- சந்திரா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி கடந்த 2012 ஆம் ஆண்டு இருவரும் வெட்டிய விறகை கிருபாலன் என்பவர் திருடி சென்றுள்ளார். இதனை பார்த்ததும் சுப்பையா- சந்திரா தம்பதியினர் கிருபாலணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த கிருபாலன் சந்திராவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சாலைகிராமம் காவல்துறையினர் கிருபாலனை  கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பெண்ணை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக கிருபாலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |