Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…. 300 ரூபாய் தரிசன டிக்கெட்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாத கட்டண தரிசனத்துக்கும் முந்தைய மாதத்தின் இறுதியில் 300 ரூபாய் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அந்த அடிப்படையில் வருகின்ற 2021 டிசம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1 நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது.

வழக்கமாக டிக்கெட் வெளியிடப்பட்ட ஓரிரு நிமிடங்களில் அணைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இலவச தரிசன டிக்கெட்களை பொறுத்தவரையிலும் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 டிக்கெட்டுகளும், ஆன்லைனில் 5,000 டிக்கெட்டுகளும் என மொத்தம் 10,000 இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட இருக்கிறது. நேரடி இலவச டிக்கெட்களை பொறுத்தவரையிலும் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்கள் 31-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் ஆன்லைன் டிக்கெட்களை முன்கூட்டியே பெற வேண்டியது அவசியமாகும்.

நாளை மறுநாள் காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 5,000 டிக்கெட்டுகள் வீதம் ஒரு லட்சத்து 55 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படுகிறது. ஆகவே அடுத்த 2 நாட்கள் ஏழுமலையான் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாட்களாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமலையில் பெய்த கனமழையால் தேவஸ்தானம் பெரும் சேதத்தை சந்தித்தது. இதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணை செயல் அதிகாரி சதா பார்கவி பேசியபோது, “பேரிடர் மேலாண்மை தொடர்பான வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இதில் பொறியியல், ஐடி, சுகாதாரம், வனத்துறை, எலக்ட்ரிகல், பாதுகாப்பு போன்ற துறைகள் ஒன்றிணைந்து செயல்படும். தற்போது கட்டுப்பாட்டு அறை அமைத்து முன்னெச்சரிக்கை வழிமுறைகளை வகுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நிலச்சரிவு ஆகிய இயற்கை பேரிடர்கள் உருவாகும்போது விரைவாக செயல்பட வேண்டியது, பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருக்கும்” என கூறியுள்ளார்

Categories

Tech |