கரடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருக்கும் சாலையில் சுற்றித் திரிந்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கரடி சுமார் ஒரு மணிநேரம் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.