Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…. கர்நாடகா மாநிலத்தில் அதிர்ச்சி….!!!

வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்தவர்களில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 70 உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் வந்தவர்களில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 31 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |